மூதாட்டி பலி
கொட்டாம்பட்டி: பால்குடி சையது அம்மாள் 70, உடல் நலக் குறைவு ஏற்படவே உறவினர் அக்பர் டூவீலரில் ஏற முயற்சித்த போத தவறி விழுந்ததில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அண்ணன்கள் மீது வழக்கு
திருமங்கலம்: திருப்பரங்குன்றம் கோபாலகிருஷ்ணன் பர்னிச்சர் நிறுவனம் நடத்தினார். ஓராண்டுக்கு முன் விபத்தில் பலியானார். இவரதுமனைவி கோகிலா 24. கோபாலகிருஷ்ணனின் சகோதரர்கள் வேல்முருகன், கார்த்திக் இருவரும் நிறுவனத்தின் பொருள்கள், பணம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, நிறுவனத்தையும் தங்களது பெயரில், மாற்றிக்கொண்டு, தனக்கு மிரட்டல் விடுத்ததாக கோகிலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுப்படி ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இரும்பு திருடிய இருவர் கைது
திருமங்கலம்: மதுரை வண்டியூர்மணிலால் கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் ஷட்டர் செய்யும் நிறுவனம் வைத்துள்ளார். இங்கு பணியாற்றிய கருவேலம் பட்டி சக்திவேல் 24, மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் இரும்பு பொருட்களை திருடி விற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு 130 கிலோ இரும்பு பிளேட் திருடு போனது. மணிலால் புகாரில் இருவரையும் திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
ஏட்டு டூவீலரைதிருடியவர் கைது
திருமங்கலம்: நகர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ராமச்சந்திரன். நேற்று மாலை திருமங்கலம் உசிலம்பட்டி ரோடு தனியார் மஹாலில் நடந்த விசேஷத்தில் பங்கேற்றார். அங்கு நிறுத்திய டூவீலரை நிலக்கோட்டை அருகேவுள்ள புதுப்பட்டி அய்யப்பன் 21, கள்ளச்சாவி மூலம் திறந்து எடுத்து செல்ல முயன்றது தெரிந்தது. அவரை விரட்டி பிடித்த ராமச்சந்திரன் நகர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு புகுந்து நகை திருட்டு
மதுரை: பெத்தானியாபுரம் மகராஜன் மகள் அபர்ணா 29. தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை. நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்பினார். கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, லேப்டாப் திருடு போனது தெரியவந்தது. கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரிகள் பறிமுதல்
மதுரை: செக்கானுாரணி கே.புளியங்குளம் அருகே அரசு நிலத்தில் லாரியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக வி.ஏ.ஓ., கவிதாவிற்கு தகவல் கிடைத்தது. வருவாய், போலீசார் அங்கு சென்ற போது மண் அள்ளியவர்கள் வாகனங்களை விட்டுவிட்டு தப்பினர். போலீசார் செக்கானுாரணி முருகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். மண் அள்ளப் பயன்படுத்திய 3 டிப்பர் லாரிகள், ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
நோயாளி தற்கொலை
திருமங்கலம்: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி முகமது காசிம் 58, ஆஸ்டின்பட்டி நுரையீரல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மருத்துவமனை கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
மதுரை: அய்யர்பங்களா வங்கி பணியாளர் ராஜேந்திரன். இவரது மனைவி சுகன்யா 38. இரு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. சுகன்யா ஆசிட் குடித்தார். தனியார் மருத்துவமனையில் இறந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.