மண் பரிசோதனை கட்டாயமானால் யூரியா தேவை தானாக குறையும்
Added : மே 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை-இருஆண்டுகளுக்கு ஒருமுறைமண்பரிசோதனை செய்யும்விவசாயிகளுக்குமானிய உரம் வழங்கினால்,யூரியாவின் தேவை தானாக குறையும்'என,வேளாண் விஞ்ஞானிகள்தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடியானாலும் முறையான உரம், இடுபொருள், நீர் மேலாண்மை விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லாததால் சரியான மகசூல் இலக்கை அடையமுடியவில்லை. தமிழகத்தில் பெரும்பாலும்நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதற்கு தண்ணீர், யூரியாவின் தேவை அதிகம். மானியத்தில் கிடைப்பதால்விவசாயிகள்பலர்யூரியாவை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் மகசூல் பாதிப்புடன் மண்மலட்டுத்தன்மை அடைகிறது.ஏப்ரல்முதல் செப்டம்பர்காரீப் பருவத்திற்கு மத்திய அரசு ரூ.62ஆயிரம் கோடி உர மானியம்வழங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் யூரியா 45 கிலோ மூடை ரூ.2450. விவசாயிகளுக்கு விற்கப்படும் விலை ரூ.266.50. மானியமாக ரூ.2183.50 மத்திய அரசு வழங்குகிறது. டி.ஏ.பி.,50 கிலோ மூடை ரூ.4073. மத்திய அரசின் ரூ.2501 மானியம் போக ரூ.1350க்கு விற்கப்படுகிறது.

என்.பி.கே. (17:17:17) விலை ரூ.2768. அதில் ரூ.1615 மானியம் தரப்படுகிறது. எம்.ஓ.பி. (பொட்டாஷ்) விலை ரூ.2654. மானியம் ரூ.759. இப்படி எல்லா உரங்களுக்கும் 50 - 80 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இவற்றைவிவசாயிகள்முறையாகபயன்படுத்தினால் பயிருக்கும் மண்ணுக்கும் நல்லது.2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை வழங்க வேண்டும்.

இந்த அட்டையை விவசாயிகளின் ஆதார் எண், நிலத்தின் சர்வே எண்ணுடன் இணைக்க வேண்டும். இதை செய்தால்எந்த பயிர் சாகுபடி செய்ய உள்ளனர் என கேட்டறிந்து எவ்வளவு ஏக்கர்,எவ்வளவு உரம்தேவை எனஅதிகாரிகள் பரிந்துரைக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X