காஞ்சிபுரம் : ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில், காஞ்சிபுரம் வரதர் கோவில், கருடசேவை உற்சவத்தையொட்டி, 'புகழ்பெற்ற காஞ்சிபுரம் கருடசேவை, உலகப்பாரம்பரிய விழாக்கள்' என்ற தலைப்பில், புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில், மூன்றாம் நாள் உற்சவமான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதில், யுனெஸ்கோ பட்டியலில் உள்ள உலக பாரம்பரிய விழாக்கள், தமிழக கோவில்களில் நடைபெறும் கருடசேவை விழாக்கள், இந்திய மாநிலங்களில் அறுவடை திருவிழாக்கள் அடங்கிய புகைப்பட தொகுப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன கருடசேவை உற்சவத்தை காண வந்த பக்தர்கள், கண்காட்சியை வியந்து பார்த்தனர்.காஞ்சிபுரம் வரதர் கோவில் கருடசேவை விழாவை, உலக பாரம்பரிய திருவிழாக்களின் தொகுப்பில் சேர்க்க வேண்டும் என, ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.