மூதாட்டியிடம் செயின் பறிப்பு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
Added : மே 16, 2022 | |
Advertisement
 


பொன்னேரி : பொன்னேரி அருகே, பெண்ணிடம், 6 சவரன் நகையை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த, திருவேங்கிடபுரம் பகுதியை சேர்ந்தவர் கனிகண்ணன், 73; ஓய்வு பெற்ற அரசு அலுவலர். இவரது மனைவி ஜெயகுமாரி, 65.இவர் நேற்று மாலை, அதே பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.



வீட்டின் அருகில் வரும்போது, பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர், ஜெயகுமாரியின் கழுத்தில் இருந்த, 6 சவரன் செயினை பறித்து தப்பிஓடினார்.தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்வையிட்டு, பெண்ணிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X