இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்
Added : மே 16, 2022 | |
Advertisement
 


திருவாலங்காடு : இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டடம் மற்றும் பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என, ரங்காபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சியில் ரங்காபுரம் கிராமம் அமைந்துள்ளது.



இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி மக்களை, மெயின் ரோடுடன் இணைக்கும் தார்ச்சாலை பழுதடைந்து கற்சாலையாக காட்சியளிக்கிறது.பழுதடைந்த தார்ச்சாலையால் இதுவரை ஐந்து விபத்துகள் நடந்துள்ளன.அதேபோன்று ரேஷன் கடை பழைய நீர்த்தேக்க தொட்டி கட்டடத்தில் இயங்குகிறது.

அந்த கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், மழை காலத்தில் ரேஷன் பொருட்களை தேக்கி வைப்பதில் சிரமமாக உள்ளது.இந்நிலையில், கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ரேஷனுக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என, அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் பணி சரி செய்யப்படும்' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X