மப்பேடு : மப்பேடு ஊராட்சியில் 1.60 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக் கூடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சமுதாய கூடம் வருமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்து உள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில், சமுதாயக்கூடம் இல்லாததால், தனியார் மண்டபங்களை பொதுமக்கள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இப்பகுதியிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுஉள்ளது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் மப்பேடு ஊராட்சியில், சமுதாயக்கூடம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.