பெண்ணுக்கு வெட்டு இருவருக்கு வலை | கடலூர் செய்திகள் | Dinamalar
பெண்ணுக்கு வெட்டு இருவருக்கு வலை
Added : மே 16, 2022 | |
Advertisement
 


புவனகிரி : மருதுார் அருகே பெண்ணை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி தாலுகா, மருதுார் அடுத்த வடதலைக்குளம் கிழக்குத் தெரு தனசேகரன் மனைவி கலா,45; பால் வியாபாரம் செய்கிறார். இவருக்கும் அதேப்பகுதி சக்கிவேல் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

கடந்த 12ம் தேதி இரவு 9.00 மணிக்கு சக்திவேல் மற்றும் அதேப் பகுதி மதியழகன் ஆகியோர் குடிபோதையில் கலா வீட்டிற்கு சென்று, அவரை திட்டி, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.காயம் அடைந்த அவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X