இடையூறாக இரும்பு தடுப்புகள்
மீஞ்சூர்- - வண்டலுார் வெளிவட்ட சாலையில் இருந்து, பொன்னேரி திரும்பும் வாகனங்கள் திரும்பும் வளைவு திசையில், இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகனங்கள், அங்குள்ள மற்றொரு வளைவு பகுதிக்கு சென்று திரும்புகின்றன. இதனால் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேற்கண்ட பகுதியில் உள்ள இரும்பு தடுப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.சரவணன், மீஞ்சூர்.