சந்திரன் பர்னிச்சர் ஷோரூம்; புதுப்பொலிவுடன் திறப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
சந்திரன் பர்னிச்சர் ஷோரூம்; புதுப்பொலிவுடன் திறப்பு
Added : மே 16, 2022 | |
Advertisement
 



கடலுார் : கடலுார் அடுத்த குடிகாடு டாக்ரோஸ் கெமிக்கல்ஸ் எதிரில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பொலிவுடன் கூடிய சந்திரன் டிம்பர்ஸ் அண்ட் பர்னிச்சர்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. ஷோரூம் உரிமையாளரும், பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினருமான சந்திரகாஸ் வரவேற்றார். நீலா சந்திரகாஸ், நிர்மலா தேவி குத்துவிளக்கேற்றி ஷோரூமை திறந்து வைத்தனர்.



விழாவில் பா.ம.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் போஸ் ராமச்சந்திரன், அன்னவல்லி ஊராட்சி தலைவர் சீனிவாசன், வழிசோதனைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் கருணாகரன், கொடுக்கன்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் நந்தகோபால், பழமலை பிரமோட்டர்ஸ் பழமலை, கட்டட கலை நிபுணர் விஜயகிருஷ்ணன், மேலாளர் கஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.உரிமையாளர்கள் சந்திரகாஸ், சசிக்குமார் கூறுகையில் 'வீடு, அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து பர்னிச்சர்களும் இறக்குமதி செய்யப்பட்ட தேக்கு மரத்தினால் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் செய்யப்படுகிறது.மரம் அறுப்பகம், மரம் இழைப்பகம் பணிகள் சிறந்த முறையில் செய்து தரப்படும். பர்னிச்சர்களை உற்பத்தி விலையிலும், மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். தள்ளுவண்டி முதல் திருத்தேர் வரை ஆர்டரின் பேரிலும், வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களிலும் செய்து தருகிறோம்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X