ஈரோடு: அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 25 மி.மீ., மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், பல இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில், ௨௫ மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கோபி, 1, வரட்டுபள்ளம், சத்தி தலா, 5, பவானிசாகர், 6.2, பவானி, 1.6, தாளவாடி, நம்பியூர், சென்னிமலை தலா, 2, மொடக்குறிச்சி, 1.2, எலந்தகுட்டைமேடு, 3.4, கொடிவேரி, 6, குண்டேரிபள்ளம், 11.4.