கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தில் இரட்டை வேடம்; தி.மு.க., மீது பா.ஜ., விவசாய அணி சாடல்
Added : மே 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஈரோடு : கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது' என்று, பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ், குற்றம் சாட்டியுள்ளார்.

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி, தடப்பள்ளிஅரக்கன்கோட்டை வாய்க்காலில் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் அமைக்கும் திட்டம், 940 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் கீழ்பவானியில் கான்கிரீட் திட்டத்துக்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த, 2021 பிப்.,ல் நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி, 940 கோடி ரூபாயில் கீழ்பவானி அணை வாய்க்காலின் கரைகளை பலப்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.அப்போதே, விவசாயிகளை, தி.மு.க., துாண்டிவிட்டு எதிர்த்தது. தேர்தலின் போது விவசாயிகளிடம் கலந்து முடிவெடுப்பதாக கூறியது. ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகளிடம் ஆலோசிக்காமல், தொழில் நுட்ப குழுவை அமைத்து, அவசர கதியில், 940 கோடி நிதியை பெற தி.மு.க., துடிக்கிறது.

பாசன வாய்க்கால், பயன் பெறும் விளை நிலம், நீர் பயன்பாட்டை கணக்கெடுப்பு நடத்தவில்லை. இதுபற்றி, அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் தெரியாது. 201 கி.மீ., துார பிரதான வாய்க்கால், 720 கி.மீ., நீளத்துக்கு, 75 கிளை வாய்க்கால் செல்கிறது. இதில் எங்கு நீர் கசிகிறது, எவ்வளவு நீர் வீணாகிறது என ஆய்வு செய்யவில்லை.கடந்த, 2013ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கரையை பலப்படுத்த திட்டம் அறிவித்தபோதும், விவசாயிகளை துாண்டிவிட்டு, தி.மு.க., திட்டத்தை முடக்கியது. தற்போதும், ஒரு புறம் கான்கிரீட் போடும் வேலையை துவக்கியும், மறுபுறம் தி.மு.க.,வின்

சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சேனாபதி தலைமையில் கான்கிரீட் போடுவதை எதிர்த்தும், தி.மு.க., தொடர்ந்து இரட்டை வேடம் போடுகிறது. முறையான ஆய்வுக்குழு அமைத்து, விவசாய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அவசர கதியில் கான்கிரீட் திட்டத்தை துவக்கி, நிதி முறைகேட்டில் ஈடுபட முயன்றால், பா.ஜ., விவசாய அணி சார்பில் நடைபயணம் மேற்கொள்வோம். இதை பா.ஜ., தலைவர் அண்ணாமலை துவக்கி வைப்பார். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X