குளித்தலை : குளித்தலை கூடலுார் ஊராட்சி, பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், 2022--2023ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசார பயணம் நடந்தது. இதில், பொம்மநாயக்கன்பட்டி, மங்காம்பட்டி, குழந்தைப்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, அழகனாம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், 6 முதல் 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. மேலும், பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நவீன கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நுாலகம், புதிய வகுப்பறைகள் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கேட்டுக்கொண்டனர். இப்பிரசாரத்தில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.