கரூர் : கரூர் மாரியம்மன் கோவிலில், நேர்த்திக்கடன் செலுத்தவுள்ள பக்தர்கள், நேற்று காப்பு கட்டி கொண்டனர்.
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த, 8ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த, 13ல் பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை, நேர்த்திக்கடன் செலுத்தவுள்ள பக்தர்கள், சுவாமியை வழிபட்டு, காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினர்.
வரும், 23ல் தேரோட்டம், 22, 23, 24 ஆகிய நாட்களில் மாவிளக்கு ஊர்வலம், பால்குட ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 25ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும் வரும் ஜூன், 2ல் பஞ்ச பிரகாரம், 3ல் புஷ்ப பல்லக்கு, 4ல் ஊஞ்சல் உற்சவம், 5ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.