மாமல்லபுரம் - புதுச்சேரி 6 வழி சாலை: பிரதமர் துவக்கி வைக்கிறார்
Added : மே 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: பிரதமர் மோடி வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதோடு, பல்வேறு திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.



தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே மேம்பாலச்சாலை அமைக்கும் பணிகள், 2010ம் ஆண்டு 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், கூவத்தில் நீரோட்டம் பாதிக்கும் வகையில் பிரமாண்ட துாண்கள் அமைக்கப்பட்டாதாக கூறி, மேம்பால சாலை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பணிகள் துவங்கவில்லை.தற்போது, இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5,800 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு மேம்பாலச்சாலை அமைய உள்ளது.இதற்கான, அடிக்கல் நாட்டு விழா, வரும் 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.இந்த விழாவில், சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மத்திய நகர்ப்புற வீட்டுவசதி துறை வாயிலாக கட்டப்பட்டுள்ள 1,000 அடுக்குமாடி குடியிருப்புகளையும், பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான சாலையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், தமிழக அரசு சமீபத்தில் ஒப்படைத்தது. இந்த சாலையை ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளும் துவங்கப்பட உள்ளது. போடிநாயக்கனுார் - -மதுரை இடையிலான ரயில் சேவை திட்டங்களையும் பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைய உள்ள பன்முக சரக்கு போக்குவரத்து பூங்கா, மீன்சுருட்டி- - சிதம்பரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.இதில், பிரதமருடன், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முதல் முறையாக அரசு நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க உள்ளனர். அப்போது, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம், முதல்வர் ஸ்டாலின் முன்வைப்பார் என தெரிகிறது. இதனிடையே, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம், கடற்படை ஆகியவை இடையே, நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இதில், முதல்வர் ஸ்டாலின், மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங், தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X