கோவை : அன்னியச் செலாவணி வர்த்தகம் செய்வதாக கூறி, 400 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான அனைத்து புகார்களையும், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரே விசாரிக்க உள்ளனர்.
இது தொடர்பாக, விமல் குமார், அவரது மனைவி ராஜேஸ்வரி, நிறுவன மேலாளர் அருண்குமார், விமல்குமாரின் சகோதரர் சந்தோஷ், யுவன், சுஜித், நிறுவன கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கவிதா ஆகியோரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கோவை பொருளாதார குற்றப்பிரிவில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் புகார்களை பெற்று, அவற்றை ஒட்டு மொத்தமாக கோவை பொருளாதார குற்றப்பிரிவில் ஒப்படைக்கவும், போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.