அவிநாசி : அவிநாசி அருகே செப்டிக் டேங்கில் இருந்து தொழிலாளி உடல், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
வீட்டின் பின்பகுதியில் செப்டிக் டேங்க் தொட்டியில், அழுகிய நிலையில் செல்வான் உடல் மீட்கப்பட்டது. அருகில் ரத்தக் கறையுடன் கட்டை இருந்தது. வீட்டின் தரை மற்றும் சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது. செல்வான் கொல்லப்பட்டு செப்டிங் டேங்க் தொட்டியில் உடல் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவிநாசி போலீசார் வழக்கு பதிந்து, மகன் நாகராஜை தேடி வருகின்றனர்.