பனமரத்துப்பட்டி, :குரால்நத்தம் ஊராட்சி, ஜருகுமலையில், 250க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அங்கு, மலையில் ரேஷன் கடை இல்லை. இதனால், 15 கி.மீ., துாரமுள்ள சன்னியாசிகுண்டு ரேஷன் கடைக்கு வந்து, பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ரேஷன் கடைக்காக, 30 கி.மீ.,
பயணத்தை மேற்கொள்கின்றனர். இதுகுறித்து, ஜருகுமலை மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே, ரேஷன் கடை கட்ட கடந்த மூன்று மாதத்திற்கு முன், எம்.பி., பூமி பூஜை போட்டார். இதுவரை
கட்டுமானப் பணி தொடங்கவில்லை. ஜருகுமலையில், ரேஷன் கடை கட்ட அதிகாரிகள் நட
வடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.