வாழப்பாடி,:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ், 65. அதே பகுதியிலுள்ள இவரது விவசாய தோட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக, மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதையறியாமல் விவசாய தோட்டத்தில் கிடந்த மின்கம்பியை எடுத்த நடராஜ் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார், விவசாயி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.