ஓமலுார்,:அரசு மருத்துவமனையில், 'செவிலியர்' தின விழா கொண்டாடப்பட்டது.ஓமலுார் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம், முதன்மை மருத்துவ அலுவலர் நாகபுஷ்பராணி தலைமையில், 'செவிலியர் தின' விழா கொண்டாடப்பட்டது. அதில், நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவ படத்தின் முன், செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பின், கேக் வெட்டி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவில் ஓய்வு பெற்ற செவிலியர் கண்காணிப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்
களுக்கு பரிசு வழங்கப்பட்டது.