ஏனாமில் சூதாட்ட விடுதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Added : மே 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

புதுச்சேரி:ஏனாமில் மனமகிழ் மன்றம் பெயரில் சூதாட்ட விடுதி நடத்த அனுமதி அளித்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சிலர் அரசிடம் உரிமம் பெற்று, சூதாட்டம் நடத்தி வருகின்றனர்.ஏனாமில் 'ராயல் ஏனாம் ரெக்ரேஷன் சொசைட்டி' என்ற பெயரில் அரசு அனுமதி பெற்று சூதாட்டம் நடத்தப்படுகிறது.


தினசரி ரூ.5 கோடி அளவில் சூதாட்டம் நடக்கிறது.அங்கு ஏனாமை சேர்ந்தவர்கள் விளையாட அனுமதியில்லை. பிற மாநிலங்களை சேர்ந்த தாதாக்கள், குற்றப்பின்னணி உள்ளவர்கள் சூதாடி வந்துள்ளனர்.பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரியை சேர்ந்த போலீஸ் உயரதிகாரி தலைமையிலான குழுவினர் அந்த கிளப்புக்கு 'சீல்' வைத்து, 36 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
இதன் உரிமையாளர் ஐதராபாத்தை சேர்ந்தவர். இவருக்கு ஏனாமில் அனுமதி கொடுத்த அதிகாரியை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சித் தலைமையின் அனுமதி பெற்று, ஏனாமில் போராட்டம் நடத்தப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து மனமகிழ் மன்றங்களை ஆய்வு செய்திட வேண்டும். மசாஜ் சென்டருக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இவற்றுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அன்பழகன் கூறினார்.மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X