விபத்தில் இறந்த 15 பேர்குடும்பத்திற்கு நிவாரணம்
Added : மே 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

செங்கல்பட்டு;செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களுக்கு நேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 159 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.தொடர்ந்து, மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில், சாலை விபத்தில் இறந்த 15 பேர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் நிவாரண நிதி தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 15 லட்சம் ரூபாயை, மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.செங்கல்பட்டு தாலுகாவில் 18 இருளர் உட்பட 28 பேருக்கு முதியோர் உதவித்தொகை, சலவை தொழிலாளர் 10 பேருக்கு சலவை பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், அவர் வழங்கினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், தனி சப் - கலெக்டர் ஜெயதீபன், பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X