திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழா நிறைவு பெற்றது.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கடந்த 5ம் தேதி துவங்கியது.ஹிந்து அறநிலையத் துறை நிர்வகிக்கும் இக்கோவில், விழாவை முன்னிட்டு, தினமும் காலை, இரவு என, சிறப்பு வழிபாடு நடந்து, சுவாமிகள் வீதியுலா சென்றனர்.மூன்றாம் நாளில், அறுபத்துமூன்று நாயன்மார் கிரிவலம்; ஏழாம் நாளில் வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் திருத்தேரில் வீதியுலா.பத்தாம் நாளில், ரிஷப தீர்த்தத்தில் நடராஜர், சங்குதீர்த்தத்தில் வேதகிரீஸ்வரர், புனித நீராடிய தீர்த்தவாரி என, முக்கிய உற்சவங்கள் நடைபெற்றன.நேற்று முன்தினம் இரவு, பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், பந்தம்பறி உற்சவம் நடந்து, சுவாமிகள் வீதியுலா சென்றனர்.அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, சித்திரை பெருவிழா நிறைவு பெற்றது.