தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட, வெள்ளை முள்ளம்பன்றி மற்றும் டாமரின் குரங்கு ஆகியவற்றை, விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தனர்.தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிலிருந்து, 'தாய் ஏர்வேஸ்' விமானம், நேற்று முன்தினம் சென்னை வந்தது. அதில் வந்த பயணி ஒருவரை, சுங்கத் துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.அப்போது, அவர் துணிகள் வைத்திருந்த அட்டைப் பெட்டிக்குள், வெள்ளை முள்ளம்பன்றி மற்றும் டாமரின் குரங்கு ஆகியவை உயிருடன் இருந்தன.இதுகுறித்து,W வன விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அதன் வகைகளை அடையாளம் கண்டு தெரிவித்தனர். பின், உயிருடன் கூடிய வன விலங்குகள், இந்தியாவிற்குள் கொண்டுவர அனுமதி இல்லை எனக் கூறி, அவற்றை தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்பினர்.மேலும், உயிருடன் கூடிய விலங்குகளை, அனுமதியின்றி மறைத்து கொண்டு வந்த பயணியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.