கோவை: தமிழகத்தில் நுால் விற்பனையாளர்கள் நேற்று கடையடைப்பு மற்றும் விற்பனை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுக்க உள்ள மாவட்டங்களில், 5,000 எண்ணிக்கையிலான நுால் வியாபாரிகள் உள்ளனர். இவர் 10 நெம்பர் நுால் முதல் 100 நெ., நுால் வரை அனைத்து வகையான நுால்களையும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பேப்ரிகேசன், காட்டன், சேலை, ரையான், ஸ்டேபிள் பைபர், பாலியெஸ்டர் துணி தயாரிப்புக்கு சப்ளை செய்யப்படுகிறது.நேற்று தமிழகத்திலுள்ள நுால் விற்பனையாளர்கள் மேற்கொண்ட கடையடைப்பு மற்றும் விற்பனை நிறுத்த போராட்டத்தால், பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.கோயமுத்துார் யார்ன் மர்சென்ட்ஸ் மற்றும் புரோக்கர்ஸ் அசோசியேசன் செயலாளர் நேரு ராமநாதன் கூறுகையில், ''பருத்தி தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்ற, 20 நெ., நுால் 400 ரூபாய்க்கு விற்கிறது. 40 நெ., நுால் 450 ரூபாய்க்கும், 60 நெ., நுால் 600 ரூபாய்க்கும் விற்கிறது. பஞ்சு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டும்; நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.