அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் 3 பேர் கைது: 3 பேருக்கு வலை
Added : மே 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.




கடலுார் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து விருத்தாசலத்திற்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று வந்தது. அப்போது, பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவருக்கும், சு.கீணனுாரைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் மணிகண்ணன், 29, இடையே டிக்கெட் எடுக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மனமுடைந்த பெண், விருத்தாசலத்தில் உள்ள உறவினருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார். பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 6 பேர், கண்டக்டர் மணிகண்ணனை தாக்கி, ஆட்டோவில் ஏற்றிச் சென்று போலீசில் ஒப்படைத்தனர்.

கண்டக்டரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக கூறி, போக்குவரத்து ஊழியர்கள் பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.மர்ம நபர்களை கைது செய்யகோரி, போக்குவரத்து பணிமனை 1 மற்றும் 2ல் பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, மணிகண்ணன் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், விருத்தாசலம் போலீசார் ராமச்சந்திரன்பேட்டை கோவிந்தன், 20; மோகன்ராஜ், 40; வெங்கடேசன்; நகராட்சி கவுன்சிலரும், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவருமான சிங்காரவேல், வடக்கு பெரியார் நகர் ஆட்டோ டிரைவர் அசோக்குமார், 19, மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 6 பேர் மீது வழக்கு பதிந்தனர். கோவிந்தன், மோகன்ராஜ், அசோக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர். இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X