விழுப்புரம் : பாலியல் வழக்கில் ஜாமின் கோரி இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனு, விழுப்புரம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையொட்டி, ஐந்து பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இன்ஸ்பெக்டர் தவிர்த்து மற்ற நால்வருக்கும் ஜாமின் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தற்போது அரக்கோணம் டவுனில் பணியாற்றுகிறார். இவர் வழக்கிலிருந்து ஜாமின் கோரி, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், நேற்று விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நிலையில், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார்.