அன்னூர் வார சந்தை ஏலத்தில் தி.மு.க.,வினர் சரமாரி புகார்: 3வது முறையாக ஏலம் ஒத்திவைப்பு
Added : மே 18, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அன்னூர்:அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஏலத்தில், தி.மு.க.,வினர் சரமாரியாக புகார் தெரிவித்தனர். வாக்குவாதத்தால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
அன்னூர் பேரூராட்சி பகுதியில் உள்ள வாரச்சந்தையில், வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமை, மிதிவண்டி நிறுத்துமிடம் மற்றும் நவீன கழிப்பறையில் கட்டணம் வசூலித்தல், பஸ் ஸ்டாண்டில் நுழைவு கட்டணம் வசூலித்தல், 3 சமுதாய நலக்கூடங்கள் பயன்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் பேரூராட்சியின் ஐந்து கடைகளை வாடகைக்கு விடுதல் ஆகியவற்றுக்கான ஏலம் கடந்த மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் செலுத்த வேண்டிய நிரந்தர தொகை அதிகமாக இருப்பதாக புகார் கூறியதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தலா ஒரு லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டது. இரண்டு முறை ஏலம் ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது முறையாக நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் கூறத் துவங்கிய உடன் தி.மு.க.,வின் சிறுபான்மைப் மாவட்ட துணை அமைப்பாளர் நியமத்துல்லாகான் உள்ளிட்ட தி.மு.க.,வினர் சிலர், 'பேரூராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது, பேரூராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்' என்றனர்.எதிர்தரப்பினர், 'பேரூராட்சி 1995ம் ஆண்டு கட்டணம் நிர்ணயித்தது. 27 ஆண்டுகளாக உயர்த்தவில்லை. அவற்றை உயர்த்தி எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயித்து. பிறகு ஏலத்தை நடத்தலாம்' என்றனர்.இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, "மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் ரத்து செய்யப்படுகிறது" என அறிவித்தார்.வருகிற 31ம் தேதிக்குள் மீண்டும் ஏலம் நடத்தப்படாவிட்டால், ஜூன் 1 முதல் பேரூராட்சி ஊழியர்கள், கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுவர் என பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.ஏலத்தில் துணைத் தலைவர் விஜயகுமார், உள்பட பலர் பங்கேற்றனர்.



 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X