பந்தலுார்:பந்தலுார் பஜார் கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால், சாலையில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது.பந்தலுார் பஜார் பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சாலையின் ஓரங்களில் கால்வாய் அமைக்கப்பட்டு, மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டது.சில ஆண்டுகளில் கால்வாய்களை பராமரிக்காமல் விட்டதால், சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று கால்வாய்கள் அடைப்பட்டன. ஒரு கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழை காலங்களில், சாலை முழுவதும் குளம் போல் மாறிவிடுகிறது.