குள்ளஞ்சாவடி:சாலையில் கிடந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை எடுத்த துறவி போலீசில் ஒப்படைத்தார்.
வடலுார், சத்திய ஞான சபையில் தங்கியிருக்கும் தேவதாஸ் என்ற துறவி, நேற்று காலை, கடலுார் முதுநகர் அருகே நடந்து சென்றார். அப்போது, சிறிய பை ஒன்று சாலையோரம் கிடந்தது.அதனை எடுத்து பார்த்தார். அதில், ஏ.டி.எம்., அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகிய முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன் ஆகியவை இருந்தது.
இதைடுத்து ஆவணங்கள் கொண்ட பையை அவர் குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில், சப் இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் ஒப்படைத்தார். எஸ்.ஐ., இளையராஜா மொபைல் மூலம் உரிய நபரை தொடர்பு கொண்டு விசாரித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து அவற்றை ஒப்படைத்தார். முக்கிய ஆவணங்கள் மற்றும் மொபைலை ஒப்படைத்த துறவி தேவதாசை போலீசார் பாராட்டினர்.