குற்றச்சம்பவங்களை தடுக்க 'சேப் இடுக்கி' திட்டம் அறிமுகம் | தேனி செய்திகள் | Dinamalar
குற்றச்சம்பவங்களை தடுக்க 'சேப் இடுக்கி' திட்டம் அறிமுகம்
Added : மே 18, 2022 | |
Advertisement
 

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் மழை காலங்களில் திருட்டு உள்பட குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 'சேப் இடுக்கி' எனும் திட்டத்தை போலீசார் நடைமுறைபடுத்துகின்றனர்.


இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு மழையின்போது திருட்டு உள்பட குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பது வழக்கம். அதனை தடுக்கும் வகையில் 'சேப் இடுக்கி' எனும் திட்டத்தை போலீசார் நடைமுறைபடுத்த உள்ளனர்.அதன்படி மாவட்டத்தில் உள்ள 5 சப் டிவிஷன் டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்படுவர்.
சமூக அமைப்புகளுடன் இணைந்து ரோந்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பூட்டிக் கிடக்கும் மற்றும் தனிமையில் உள்ள வீடுகள், வழிபாட்டு தலங்கள்,வங்கிகள், ஏ.டி.எம். மற்றும் சுற்றுலா மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பயன்படுத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வீடுகளை பூட்டிவிட்டு தொலைதூரத்திற்கு செல்வோர் அருகில் வசிப்பவர்களிடமும், போலீசாரிடமும் தகவல் அளிக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X