மூணாறு:கேரளாவில் மே 19 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அலர்ட்:
நேற்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழைக்கான ரெட் அலட்ர்டும், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான எல்லோ அலர்ட்டும் வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
மாநிலத்தில் மே 19 வரை மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இயந்திரங்களை பயன்படுத்தி மண் எடுக்கவும், பாறை உடைக்கவும் தடை விதித்தது. மலையோரப்பகுதிகளில் தேவையற்ற பயணத்தையும், சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணத்தையும் தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை தங்கும் இடத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். சுற்றுலா துறை, மாவட்ட நிர்வாகம் நிபந்தனைகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். பாதுகாப்பற்ற, அனுமதி இல்லாத பகுதிகளுக்கு செல்லக் கூடாது உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.