உரக்கடைகளில்  வேளாண்அதிகாரிகள் திடீர் ஆய்வு  | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
உரக்கடைகளில்  வேளாண்அதிகாரிகள் திடீர் ஆய்வு 
Added : மே 18, 2022 | |
Advertisement
 
Latest district News

தியாகதுருகம்:தியாகதுருகத்தில் உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தியாகதுருகம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்தது. இதையடுத்து, வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜ், வேளாண் அலுவலர் வனிதா ஆகியோர் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு யூரியா மற்றும் வேளாண் இடுபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.மேலும், விலைப் பட்டியலை கடையின் முன் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். நேற்று 10க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X