ஜூன் 3, 4ல் தொழில்முனைவோர் மாநாடு
Added : மே 18, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

புதுச்சேரி:'புதுச்சேரியில் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும்' என, அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் வடிசாராய ஆலையில் பணிபுரியும் 22 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.இதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் ஊழியர்களுக்கு பதவி உயர்விற்கான ஆணையை வழங்கினார்.பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் காவல், கல்வி, தொழில், மின்சாரம் என பல்வேறு துறைகளில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். தற்போது வடிசாராய ஆலையில் 22 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக செயல்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடி கூறியது போல் பெஸ்ட் புதுச்சேரியை நோக்கி அரசு செயல்படுகிறது.

ஜூன் 3, 4 ஆகிய 2 நாட்கள் புதுச்சேரியில் தொழில் முனைவோர் மாநாடு நடக்கிறது.மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். பல முதலீட்டாளர்கள் புதுச்சேரியில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். கல்லுாரியில் மாணவிகள் மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற மோதலை அரசு ஒரு போதும் அனுமதிக்காது.இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X