காணாமல் போன போன் மூலம்ரூ.57 ஆயிரம் 'அபேஸ்' | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
காணாமல் போன போன் மூலம்ரூ.57 ஆயிரம் 'அபேஸ்'
Added : மே 18, 2022 | |
Advertisement
 

விழுப்புரம்:செஞ்சியில் அரசு மருத்துவமனை டிரைவரின் காணாமல் போன மொபைல் போன் மூலம் 57 ஆயிரத்து 710 ரூபாயை வங்கி கணக்கில் இருந்து எடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, திண்டிவனம் சாலையைச் சேர்ந்தவர் சையத் அன்சர் மகன் சையத் பரீத், 31; சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை டிரைவர். இவர், கடந்த பிப்ரவரி 10ம் தேதி பணிக்குச் செல்ல செஞ்சி கூட்ரோட்டில் பஸ் ஏறிய போது, அவரது ஆன்ராய்டு மொபைல் போன் திருடு போனது.


இந்த மொபைல் எண்ணில், அவருக்கு செஞ்சி தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையுடன் இணைத்து, போன்பே, கூகுள்பே, பேடிஎம் செயலிகளை பயன்படுத்தி வந்துள்ளார்.கடந்த பிப்ரவரி 11ம் தேதி சையத் பரீத் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றார். காணாமல் போன மொபைல் போனை பயன்படுத்தி மர்ம நபர், போன்பே செயலி மூலம் 57 ஆயிரத்து 710 ரூபாயை ஒரே நாளில் 15 தவணைகளாக எடுத்தது தெரியவந்தது.இது குறித்து சையத் பரீத் நேற்று, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X