விழுப்புரம்:விழுப்புரத்தில் நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவு நீரை சீரமைத்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே, நேரு சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.இதைப் பார்த்த விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, நேற்று பாதாள சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.பின், அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர், அவருக்கு உதவி புரிந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் கழிவு நீரை அப்புறப்படுத்திய சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு, பாராட்டு தெரிவித்தனர்.