விபத்தில் தொழிலாளி சாவு: உறவினர்கள் சாலை மறியல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விபத்தில் தொழிலாளி சாவு: உறவினர்கள் சாலை மறியல்
Added : மே 18, 2022 | |
Advertisement
 

திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் அருகே விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த டி.தேவனுார், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 40; சாக்கு தைக்கும் கூலித் தொழிலாளி. இவர், கடந்த 14ம் தேதி இரவு 8:30 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.


தேவனுார் கூட்ரோடு அருகே எதிரே வந்த பைக் குமார் மீது மோதியது. இதில் குமார் படுகாயமடைந்தார். உடன் சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அரகண்டநல்லுார் போலீசார், பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருக்கோவிலுார், கீழையூரைச் சேர்ந்த வினோத்குமார், 33; என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குமார் நேற்று முன்தினம் இறந்தார். நேற்று பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.உடலை பெற்ற குமாரின் உறவினர்கள், போலீசார், குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்தும், இறந்த குமார் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாலை 6:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பூங்கோதை மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து 6:30 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X