பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Added : மே 18, 2022 | |
Advertisement
 

பவானிசாகர்:நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. கடந்த சில நாட்களாக, நீலகிரி மாவட்ட பகுதி மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம், 458 கன அடியாக இருந்த நீர்வரத்து, 1,987 கனஅடியாக நேற்று அதிகரித்தது. மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 81.26 அடி, நீர் இருப்பு, 16.36 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையிலிருந்து அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்துக்கு, 400 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 150 கன அடி என, 550 கன அடி நீர், பவானி ஆற்றில் திறக்கப்பட்டிருந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X