மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை:இரு வாலிபர்களுக்கு 40 ஆண்டு சிறை | கரூர் செய்திகள் | Dinamalar
மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை:இரு வாலிபர்களுக்கு 40 ஆண்டு சிறை
Added : மே 18, 2022 | |
Advertisement
 

கரூர்;கடவூர் அருகே, மனம் நலம் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, இரு வாலிபர்களுக்கு தலா, 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கரூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், கடவூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன், 28, முனியப்பன், 23. இவர்கள், அதே பகுதியை சேர்ந்த, 23 வயது மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த, 2020 ஜூன், 17ம் தேதி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.இதுகுறித்து, பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் படி, குளித்தலை மகளிர் போலீசார் கணேசன், முனியப்பனை கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கணேசன், முனியப்பனுக்கு தலா, 40 ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X