பஸ் ஸ்டாண்ட் எதிரே புழுதி பறக்கும் சாலை:சீரமைக்க வலியுறுத்தி மக்கள் திடீர் மறியல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
பஸ் ஸ்டாண்ட் எதிரே புழுதி பறக்கும் சாலை:சீரமைக்க வலியுறுத்தி மக்கள் திடீர் மறியல்
Added : மே 18, 2022 | |
Advertisement
 

ஈரோடு:பஸ் ஸ்டாண்ட் எதிரே, புழுதி பறக்கும் சாலையால், அவதிக்கு ஆளாகி வரும் மக்கள், மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் எதிரேயுள்ள ஈ.வி.கே.சம்பத் சாலை, மூலப்பட்டறை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.சாலையில் மாநகராட்சி திட்டப்பணிக்காக, ஒன்பது மாதங்களுக்கு முன் சாலை தோண்டப்பட்டது. திட்டப்பணி முடிந்து மூன்று மாதமாகியும், சாலை அமைக்கவில்லை. சில வாரங்களுக்கு முன் சாலையை மட்டம் செய்ய, ஜல்லி கற்கள் கொட்டி சென்றனர். ஆனால், சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை.
பஸ்கள், கனரக, இலகு ரக வாகனங்கள் செல்லும்போது, சாலையில் புழுதி வீசுகிறது. இதனால் சாலையோர கடைக்காரர்கள், பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில், ஈ.வி.கே சம்பத் சாலையை சேர்ந்த தொழில் நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மக்கள் என, 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில், சத்தி சாலை முன் நேற்று மாலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார், மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைந்து முடித்து, அடுத்த, 10 நாட்களுக்குள் தார்ச்சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்து, 15 நிமிட போராட்டத்தை கைவிட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X