ஈரோடு:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன், 3ல் பேச்சுப்போட்டி நடக்க உள்ளது.இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஜூன், 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், தாங்கள் படிக்கும் கல்லுாரி முதல்வரிடம் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, முதல்வர் ஒப்பம் பெற வேண்டும். அதை போட்டி நாளன்று, தமிழ் வளர்ச்சி துறை இயக்குனரிடம் நேரில் வழங்க வேண்டும்.
ஒரு கல்லுாரியில் இருந்து இரு மாணவர் மட்டும் பங்கேற்கலாம். போட்டிக்கான தலைப்பு, போட்டியின்போது தெரிவிக்கப்படும். முடிவு அன்றே அறிவிக்கப்படும்.வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.