கரூர் மாவட்டத்தில் தொடரும் மழை:மயிலம்பட்டியில் 57 மி.மீ., கொட்டியது
Added : மே 18, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. அதிகப்பட்சமாக மயிலம்பட்டியில், 57 மி.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில், தென் மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு (மி.மீ.,) விபரம்: அரவக்குறிச்சி, 14, அணைப்பாளையம், 2.2, குளித்தலை, 1, தோகமலை, 2, பாலவிடுதி, 44.2, மயிலம்பட்டி, 57 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 10.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மாயனுார் கதவணை

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் விநாடிக்கு, 1,248 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி விநாடிக்கு, 1,281 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க் கால்களிலும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு விநாடிக்கு, 95 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அமராவதி ஆறு, புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 56.86 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 35.56 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 7.54 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X