பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுாரை சேர்ந்தவர் பழனியப்பன், 61; தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர். இவர், சேலம் அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி., தாவரவியலும், சென்னை பச்சையப்பா கல்லுாரியில் எம்.எஸ்சி., தாவரவியல் பட்டப்படிப்பும் முடித்துள்ளார். கடந்த, 2012 முதல், 2019 வரை, 'மதுரை மாவட்டத்தின் புனித காடுகளின் மருத்துவ பயன்பாடு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நடைமுறைகள்' பற்றி ஆராய்ச்சி செய்து, நேற்று முன்தினம் தாவரவியலில், முனைவர் பட்டம் (பி.எச்.டி.,)பெற்றார்.