மதுரை:மதுரை விளாங்குடி ராமலிங்கம் 73, சென்னையில் நடந்த தேசிய மூத்தோர் தடகள போட்டியின் 80 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
மதுரை ஆண்டாள்புரம் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரியும் ராமலிங்கம், தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாநில அளவில் தங்கப்பதக்கம் தற்போது தேசிய அளவில் தங்கம் வென்று சாதனை படைத்து வருகிறார்.அவர் கூறியதாவது:பள்ளிப்பருவத்தில் கால்பந்து, ஹாக்கி வீரராக இருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் கோவா சென்ற போது மூத்தோர் தடகளத்தில் நிறைய பெண்கள் பங்கேற்றதை பார்த்தேன். நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மதுரை அரசரடி மைதானத்தில் பயிற்சியாளர் சேந்தனிடம் பயிற்சி பெற ஆரம்பித்தேன். 100 மீட்டர், நீளம் தாண்டுதலில் மாநில அளவில் தொடர்ந்து 3 ஆண்டுகள் தங்கம் வென்றேன்.சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மூத்தோர் தடகளம் நடந்தது.
70 முதல் 75 வயதினருக்கான 80 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் பங்கேற்று 10 தடைகளை தாண்டி தங்கம் வென்றேன். தினமும் பயிற்சி செய்கிறேன். போட்டிகளில் பங்கேற்க விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சீத்தாராமன் உதவி செய்கிறார். இன்னும் தொடர்ந்து சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.இவரை பாராட்ட 99655 11121