காவலாளி கொலையில் இரு மாணவர்கள் கைது
Added : மே 18, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மதுரை : மதுரை கோச்சடையில் ஆம்னி பஸ் ஒர்க் ஷாப் காவலாளி முருகேசன் 65, கொலை வழக்கில் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் 65; கோச்சடை தனியார் ஆம்னி பஸ் ஒர்க் ஷாப் காவலாளியாக இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அவர் அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது தொடர்பாக அங்கு பகுதி நேரமாக வேலை செய்யும் காரைக்குடி சேதுபதி 21, மதுரை மணிகண்டன் 19, ஆகியோரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
பாலிடெக்னிக் மாணவர்களான இவர்கள், சில மாதங்களாக இங்கு வேலை செய்து வந்தனர். தங்கள் செலவுக்காக அலைபேசியை முருகேசனிடம் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் பணத்தை கொடுத்து அலைபேசியை கேட்டபோது, கூடுதல் பணம் கேட்டு ஆபாசமாக முருகேசன் பேசியுள்ளாராம்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.இவர்களை போலீசார் தேடிய போது, அலைபேசியை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டனர். டூவீலரில் தப்பிய போது, பழநி அருகே விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றதை போலீசார் அறிந்து கைது செய்தனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X