மதுரை : மதுரை கோச்சடையில் ஆம்னி பஸ் ஒர்க் ஷாப் காவலாளி முருகேசன் 65, கொலை வழக்கில் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கூறியதாவது:
பாலிடெக்னிக் மாணவர்களான இவர்கள், சில மாதங்களாக இங்கு வேலை செய்து வந்தனர். தங்கள் செலவுக்காக அலைபேசியை முருகேசனிடம் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் பணத்தை கொடுத்து அலைபேசியை கேட்டபோது, கூடுதல் பணம் கேட்டு ஆபாசமாக முருகேசன் பேசியுள்ளாராம்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.இவர்களை போலீசார் தேடிய போது, அலைபேசியை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டனர். டூவீலரில் தப்பிய போது, பழநி அருகே விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றதை போலீசார் அறிந்து கைது செய்தனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.