கள்ளக்குறிச்சி : ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பள்ளியின் நீட் இயக்குனர் நெட்டானியல் கூறியதாவது:
கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெரும் வகையில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியின் நீட் பயிற்சி மையங்கள் விழுப்புரம், திருக்கோவிலுார், விருத்தாசலம், கடலுார் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.நீட் நடைமுறைக்கு வந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் பள்ளியாக ஏ.கே.டி., நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, 58 மாணவர்கள் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சேர்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுவரை 548 பேர் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர். அதில், அகில இந்திய ஒதுக்கீட்டின் படி மாணவர் அரவிந்த் புதுச்சேரி ஜிப்மரிலும், மாணவி ஆர்த்தி மதுரை அரசு கல்லுாரியிலும் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
நீட் பயிற்சி வரும் 24 ம் தேதி துவங்க உள்ள நிலையில் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், மாணவர்களுக்கு எவ்வாறு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்துள்ளார்.ஏ.கே.டி., பள்ளியில் நீட் பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் இலவசமாக பதிவு செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விழுப்புரம், திருக்கோவிலுார், விருத்தாசலம், கடலுார் ஆகிய ஊர்களில் ஆந்திரா, பீகார், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு 'நீட் கிராஷ் கோர்ஸ்' பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது 'நீட் கிராஷ் கோர்ஸ்' சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு நெட்டானியல் கூறினார்.