ரகளை மாணவர்கள் ரகசியமாக கண்காணிப்பு; பின்னணி ரவுடிகளை களையெடுக்க உத்தரவு
Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் உள்ள ரவுடிகளை களையெடுக்க, உளவுப் பிரிவு போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர். அடாவடி மாணவர்களை கண்டறிவதுடன், அவர்களின் பின்னணியில் உள்ள ரவுடிகளை களையெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய கல்லுாரிகளில், மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் படிக்க வருகின்றனர். அவர்கள், புறநகர் மின்சார ரயில்கள், மாநகர பேருந்துகளில் தினமும் பயணித்து, கல்லுாரிக்கு வந்து செல்கின்றனர். அவர்களில் சிலர் 'ரூட் தல' என்ற பெயரில், ரயில், பேருந்துகளில் கூட்டம் சேர்த்து ஆட்டம் போடுவதும், ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இதில், ஒவ்வொரு கல்லுாரிகளுக்கும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், வெவ்வேறு அணிகளாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு பின்னணியில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த ரவுடிகளும் உள்ளனர். இதில் எந்த குழு வலுவானது என்பதில் அடிக்கடி மாணவர் குழுவினர் இடையிலும், ரவுடிகள் இடையிலும் மோதல் எழுகிறது. குறிப்பாக, மாநிலக் கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி, நந்தனம் அரசுக் கல்லுாரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் உருவாகிறது. இந்த மோதல், வன்முறையாக மாறுவதும் அதிகரித்து உள்ளது.

மாணவர்களின் இந்த மோதலால், பொதுமக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதே போல, பேருந்துகளில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களை தட்டிக் கேட்கும் பொதுமக்கள், ஓட்டுனர், நடத்துனர்கள் தாக்கப்படுவதும், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த, பள்ளி, கல்லுாரிகளில், போலீசார் மற்றும் கல்வி நிறுவன நிர்வாககங்களின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எனினும், மாணவர்களின் அராஜகப் போக்கு தொடர்கிறது.

இரு தினங்களுக்கு முன் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, நியூ கல்லுாரி மாணவர்கள், மாநகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது வெறித்தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, அப்துல் முத்தலிப் மற்றும் லோகேஷ் ஆகிய இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே போல, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஹாரிங்டன் சாலையில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், கத்தி, பாட்டில்கள் மற்றும் கற்களால் தாக்கிக்கொண்டர். இது தொடர்பாக, 'ரூட் தல' மாணவர்கள் கிஷோர், பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராயப்பேட்டை நியூ கல்லுாரியில், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிய, ரக்கியூப் அகமது, முசாதிக், உமர் பரூக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடாவடியாக செயல்படும் மாணவர்களை, அவர்களின் எதிர்கால நலன் கருதி, இதற்கு முன் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவர்களின் பெற்றோரை அழைத்து, அவர்களுக்கும் அறிவுரை வழங்கினர்.

அடாவடி மாணவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதை முற்றிலும் ஒடுக்க, போலீசார் அதிரடி நடவடிக்கையில் களம் இறங்கியுள்ளனர். அராஜக மாணவர்களின் பின்னணியில் ரவுடிகள் இருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்களையும், அவர்களின் பின்னணியில் உள்ள ரவுடிகளையும் களையெடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு கல்லுாரிகளை நுண்ணறிவு எனப்படும் உளவு போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வந்து செல்லும், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களில், சாதாரண உடையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல, ரயில்கள் மற்றும் பேருந்துகளிலும் ரகளை மாணவர்களை கண்டறியும் பணியில், போலீசார் ரகசியமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, பிரச்னைக்குரிய அடாவடி மாணவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன் அடிப்படையில், முதலில் ரவுடிகள் மீதும், அடுத்ததாக அவர்களின் தொடர்புள்ள மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.போலீஸ் கமிஷனர் கண்டிப்பு:

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: ரகளையில் ஈடுபடும் மாணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து திருந்த வேண்டும். நன்றாக படித்து, பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். பின், திட்டமிட்டு லட்சியப்பாதையில் பயணிக்க வேண்டும். அதை விடுத்து, தேவையற்ற ரகளை, வெட்டு, குத்து, வன்முறையில் ஈடுபடுவது எதிர்காலத்தை சீர்குலைக்கும். வழக்குப் பதிவு செய்யப்பட்டால், வேலை வாய்ப்பு கிடைப்பதில் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும். ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, மாணவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். காவல்துறையின் எச்சரிக்கைக்கு பிறகும், மாணவர்கள் அடாவடியில் ஈடுபட்டால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
19-மே-202216:02:31 IST Report Abuse
vijay ரவுடிகளுக்கு பின்னாடி அரசியல் ரவுடிகளும் உள்ளனர், அரசியல்வாதிகளே ரவுடிகளாகவும் உள்ளனர்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
19-மே-202215:05:20 IST Report Abuse
Godyes கிவ் டீ.சி கெட் தம் அவுட்.
Rate this:
Cancel
Adiyamon V Shankar - Chennai,இந்தியா
19-மே-202214:59:16 IST Report Abuse
Adiyamon  V Shankar இது போதாது நாளுக்கு நாள் மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர் எனவே மாணவர்களின் எதிர் கால நலன் கருதி அவர்களை எச்சரித்து அனுப்புவது அவர்களிடையே ஒரு அசாதாரண போக்கை உருவாக்கும் மேலும் மற்ற பண்புள்ள மாணவர்களையும் தவறு செய்ய தூண்டும். அந்த காலத்தில் சிறார் சீர்திருத்த பள்ளிகள் இருந்தது அது போலவே கல்லூரியில் பயில்பவர்களுக்கு ஒரு சீர் திருத்த கல்லூரி அவசியம் ரகளையில் ஈடுபட்டு அராஜகம் புரியும் மாணவர்களை காவல் துறை மூலம் முறையாக குற்ற பத்திரிக்கை மேற்கொண்டு அவர்களை அந்த கல்லூரியில் சேர்த்து சீர் திருத்த வேண்டும் அப்போதுதான் இதறகான ஒரு விடிவு கிடைக்கும் இல்லை எனில் இது தொடர்கதை தான் எதிர் கால மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக அமையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X