மேட்டுப்பாளையம் : காரமடை ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், யோகா பயிற்சி முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். இந்திய யோகா பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் காந்தி, நிறுவனர் அப்புகுட்டி, கவுண்டம்பாளையம் ஆனந்த சாய் யோகா மைய பயிற்சியாளர் கவியரசு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.சில யோகாசனங்கள் வாயிலாக, நுரையீரல் பிரச்னை, சர்க்கரை நோய், இதய நோய், மன அழுத்தம்,
உயர் ரத்த அழுத்தம், கண், காது தொடர்பான நோய்கள், சுவாச பிரச்னைகளை தீர்க்க முடியும் என, முகாமில் தெரிவிக்கப்பட்டது. யோகாவில் சர்வதேச அளவில் வெற்றி பெற்ற மாணவிகள் நேகா, ஷிவானி ஆகியோர் பிராணாயாம பயிற்சி, வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை கற்றுக் கொடுத்தனர்.கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உமா பிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.