வரதர் கோவிலில் இன்று தேரோட்டம்காஞ்சியில் போக்குவரத்து மாற்றம்
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், இன்று காலை, தேர் திருவிழா நடக்கிறது.


இதையொட்டி, காஞ்சிபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கான போக்குவரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ்விழாவில் மூன்றாம் நாள் கருட சேவை உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது.
ஏழாம் நாள் தேர் திருவிழா இன்று நடக்கிறது.இதற்காக, அதிகாலையில் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 4:00 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருள்கிறார். பின், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்குகிறது.மதியம், தேர் நிலைக்கு திரும்பிவிடும். மதியத்திற்கு மேல் வழக்கமான வழித்தடங்களில் வாகனங்கள் இயங்கும்.தேர் திருவிழாவை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவர்.

அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை எடுத்துள்ளது.போக்குவரத்து துறையினர் கூறியதாவது: பேருந்துகள், பிற வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் வருவதற்கு மட்டும் தடை விதித்து, ஆங்காங்கே 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து காஞ்சி நகருக்கு செல்ல ஆட்டோ, சிற்றுந்து வாகனங்கள் இயக்கப்படும். பிற நகரங்களுக்கு செல்வோர், புறவழிச் சாலையில் வழக்கம்போல் செல்லலாம்.போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



மாணவர்கள் எப்படி செல்வர்?

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் அடுத்த சுற்றுப்பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவர்கள், பேருந்துகளில் பள்ளிக்கு வருகின்றனர். இன்று தேர் திருவிழா நடப்பதால், அனைத்து பேருந்துகளும் நகருக்கு வெளியில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு தேர்வு எழுத, மாணவர்கள் எப்படி செல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவர்கள் செல்வதற்கு தனியாக, வாகனங்கள் வசதி செய்யப்படுமா என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.




மாற்றம் செய்யப்பட்டுள்ள

போக்குவரத்து தடங்கள்சென்னை, பூந்தமல்லி மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரும் அரசு பேருந்துகள், பிற வாகனங்கள் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே நிறுத்தப்படும்.வேலுார், திருத்தணி, திருப்பதி மார்க்கத்தில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரும் வாகனங்கள், ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் நிறுத்தப்படும்.தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வரும் வாகனங்கள், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.உத்திரமேரூர், கீழ்சாலை மார்க்கத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வரும் வாகனங்கள், ஓரிக்கை வரை அனுமதிக்கப்படும்.வந்தவாசி மார்க்கத்தில் இருந்து காஞ்சிபுரம் வரும் வாகனங்கள், காஞ்சிபுரம் ஆட்சியரகம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.




 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X