குடிநீர் திட்ட பணிஅதிகாரிகள் ஆய்வு
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் மற்றும் சென்னை குடிநீர் வாரியங்கள் வாயிலாக தண்ணீர் பெறப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.


தாம்பரத்திற்கு என்று, பாலாற்று படுக்கையில், மேலச்சேரி, பழைய சீவரம், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 18 கிணறு, 29 'போர்வெல்' அமைக்கப்பட்டு, குடிநீர் கொண்டு வரப்படுகிறது.கடந்த ஆண்டு பெய்த மழையில், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், மணல் அரிப்பு, துார்ந்தது போன்ற காரணங்கள் 12 கிணறுகள், 29 போர்வெல்கள் காணாமல் போயின. எஞ்சியுள்ள, 6 கிணறுகளில் இருந்து, தற்போது தண்ணீர் பெறப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு புறம், குடிநீர் வடிகால் வாரிய குழாய்களை, பழைய சீவரம் முதல் கிருஷ்ணா நகர் வரை, 43.10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில், தற்போது கோடை காலம் என்பதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பணிகளை, பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, பல்லாவரம் மண்ட குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று காலை, ஒரகடம், பழையசீவரம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, குழாய் பதிக்கும் பணி ஓரிரு மாதத்தில் முடிக்கப்படும் என்றும், அதன்பின், தாம்பரம் மாநகராட்சிக்கு, நாள் ஒன்றுக்கு, 100 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்றும், குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வாறு குடிநீர் கிடைக்கும் பட்சத்தில், குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, அதிகாரிகள் நம்பிகக்கை தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X